⊞ + A – Notification widget. உங்கள் கடிகாரத்தின் வலது பக்கத்தில் உள்ள info centre widgetஐ திறக்கும்.
⊞ + B – Show hidden icons. உங்கள் கடிகாரத்தின் இடது பக்கத்தில் உள்ள ^ ஐ திறக்கும்.
⊞ + C – Show Cortana. Cortana எனும் virtual assistant மெய்நிகர் உதவியாளரை திறக்கும்.
⊞ + D – Minimize all the windows and show desktop. Press second time maximize all the windows. திறந்துள்ள அனைத்து விண்டோஸ்களும் minimize செய்யப்பட்டு டெஸ்க்டாப் காண்பிக்கப்படும். மீண்டும் இதே கீகளை அழுத்த அனைத்து விண்டோஸ்களும் maximize செய்யப்படும்.
⊞ + E – Windows Explorer திறக்கப்படும்.
⊞ + F – Feedback Hub திறக்கப்படும்.
⊞ + G – Xbox Game bar open. இந்த கேம் பாரில் நிறைய widgetsகள் உண்டு. நீங்கள் விண்டோஸ் கீ + G அழுத்திய பின் எதுவும் வரவில்லை என்றால், நீங்கள் முதலில் Game Barஐ settingஇல் Enable செய்ய வேண்டும். Game barஐ enable செய்யவும், இந்த Game barஇல் உள்ள widgetகள் பற்றி தெரிந்துக் கொள்ளவும், இந்த நிரலை தொடரவும்.
⊞ + H – Voice Recognition. தட்டச்சு செய்வதற்கு பதில் நீங்கள் குரல் மூலமாக கட்டளை இடுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும் இந்த நிரலி உதவி செய்யும். ஆனால் இந்த குரல் ஏற்பு நிரலி உங்கள் கணினி US-English மொழியில் நிறுவி இருந்தால் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் US-English மற்றும் தமிழ் மொழி தட்டச்சு பலகை (கீபோர்ட்) இரண்டையும் நிறுவி இருந்தாலும், தற்போதைய மொழி தட்டச்சு பலகை US-English இருந்தால் மட்டுமே வேலை செய்யும். அப்பொழுதும் வேலை செய்யவில்லையென்றால் செட்டிங்க்ஸ் சென்று ப்ரைவசி தேர்வு செய்து, இடது பக்கத்தில் உள்ள Speech தேர்வு செய்து Online Speech Recognition சுவிட்சை ஆன் செய்யவும்.
⊞ +I – Settings பக்கம் திறக்கப்படும்.